சரித்திர(முறையான) நூல்களில் தேவர் இனத்தவர் சேர,சோழ,பாண்டியர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.இடைக்காலச் சோழர் ஆட்சியில் நமது இனத்தவர் பெரும் செல்வாக்கு மிக்கோராக இருந்தமை கல்வெட்டுக்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.சோழர் காலத்திய சிற்றரசர்களான சம்புவராயர்,காடவராயர் போன்றோர் நமது இனத்தவர்.இதனை வரலாற்றுத் துறை உறுதிப்படுத்தியும் உள்ளது.

நமது இனத்தவர் குறுநில மன்னர்களாகவும் ,படைத் தளபதிகளாகவும், வீரர்களாகவும் இருந்துள்ளனர்.

படையாட்சி என்றால் காலாட்படை வீரன் என்பது சரியான பொருளன்று.

படை ,ஆட்சி - இதில் எந்தச் சொல் காலாட்கள் என்று அர்த்தம் தருகிறது?படை வீரன் -அவ்வளவே.

ஆனால் சரியான பொருள் "படை வீரர்களை ஆள்பவன்" என்பதே படை + ஆட்சி. படைவீரர்களை ஆள்வோன் என்ற பொருளைத்தான் தருகிறது.

கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன. உதாரணத்திற்கு

"ஓய்மாநாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திரசோழ சம்புவராயன்"

இக்கல்வெட்டு வாசகம் பள்ளி(வன்னியர்) இனத்தவனான ராஜேந்திர சோழச் சம்புவராயனைக் குறிப்பிடுகிறது.

ஓய்மாநாடு என்பது இன்றைய திண்டிவனப் பகுதியை உள்ளடக்கியது. நாலாயிரவன் என்பது நாலாயிரம் வீரர்களைக் கொண்டவன் என்பதைக் குறிக்கிறது.

இந்த சம்புவராயன் நாலாயிரம் வீரர்களுக்குத் தலைவன் என்பதையே இக்கல்வெட்டு வாசகம் உணர்த்துகிறது.சம்புவராயர்கள் படைத்தளபதிகளாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்தது வரலாறு .

சோழர் ஆட்சி நலிவுற்றிருந்தபோது ஒரு முறை சோழ மன்னர் ஒருவரைத் தோற்கடித்து சேந்தமங்கலம்(தென்னாற்காடு) சிறையில் வைத்த காடவராயர் கோப்பெருஞ்சிங்கன் நமது இனத்தவன்தான்.
கோப்பெருஞ்சிங்கன் சிற்றரசனாயிருந்தும் தனது வலிமையினால் ஏறக்குறைய பேரரசர் நிலையை அடைந்தவன்.

நமது இனத்தின் குலச் சின்னம் வில். நமது இனத்தவர் வில்லாற்றல் மிகுந்தோர்.சோழர்படைகளில் நமது இனத்தவர் விற்போர் வீரராயும் இருந்தனர். நமது இன வில் வீரர் கொண்ட படை "வில்லிகள் படை" எனப்பட்டது.சோழ மன்னர்கள் வில்லிகள் படை இருந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

ஜனநாதத் தெரிந்த வில்லிகள்,
பண்டிதசோழத் தெரிந்த வில்லிகள்,
உடையார்ப் படை தெரிந்த வில்லிகள்,
வீரநாராயணத் தெரிந்த வில்லிகள்

எனப் பல படைகள் சோழரிடமிருந்தது.வில்லாற்றலில் சிறந்தவர்களான பள்ளி(வன்னியர்) வீரர்கள் "வில்லிகள்" எனப்பட்டனர்.

படை வீரராயும், படைத்தளபதிகளாகவும்,சிற்றரசராகவும் நமது இனத்தவர் இருந்ததை எவராலும் மறுக்க இயலாது.சோழர்களின் வலிமைக்குக் காரணமாக விளங்கியோர் நாம்.பாண்டியர் பெருமதிப்பையும் பெற்றிருந்தவர் நமது இனத் தளபதிகள். பாண்டிய மன்னருக்குச் சமமான இருக்கையில் அமரும் தகுதியைப் பெற்றவர் நமது இனத் தளபதிகள்.வீரத்தில் நாம் யாருக்கும் சளைத்தவரல்ல.வீரம் எந்த இனத்தவரின் பொதுசொத்தும் அல்ல.

7 comments:

The punisher said...

வரலாற்றில் சம்புவறாயர் என்னும் மன்னர்களை ப்ற்றி முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு தோன்றுகிறது காரணம். ராமாயண கதாபாத்திரத்தில் வாலி அனுமன் சுக்கிரீவன் மற்றும் இவர்களுடன் ஜாம்பவான் என்னும் பலம் பொருந்திய கதாபாத்திரங்கள் வரும் இதில் வாலி குரங்காகவும் ஜாம்பவானை கரடியாகவும் உருவக் பட்டிருக்கும் ஆனால் திருக்கோவிலூர் அருகே உள்ள ஊரின் பெயர் வாலி கந்தபுரம் அத்ற்க்கு வாலி இறந்த ஊர் என அர்த்தம்.
மஹா பலி என்னும் மன்னன் அசுரனாக காட்டப்படுகின்றான் மஹா பலி சுக்கிறாச்சாரியார் குலகுரு வாக இருந்துள்ளார் வாமன ஆவதாரத்த்ூக்கு பிறகு மஹா பலி வம்சம் ராமாயண காலகட்டத்தில் வாலி சுக்கிரீவனாக காட்டப்படுகின்றனர் காரணம் வாழி என்னும் பெயர் மஹபாளி எனவும் சுக்கிரீவன் சுக்கிராச்சாரியரின் பெயரை நினைவுபதுத்த படுகின்றது வாலி சொந்தமான மதுவானம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது வாலி இடத்தை காண்பித்த ஸப்ரி கேரள பெண்ணாக வருகிறாள்.

வாணர்கள் என்றாள் வான அரசர்கள் என்றும் ஒரு பெயர் தெரிகிறது. அதனால் வாணர்களேய் வானவாராயர்களாகவும் ஜாம்பவான் என்னும் கரடி இனத்தவர்கள் சம்புவறாயர்களாக மாற்றம் பெற்று இருக்கலாம் என்பது இங்கு னோக்கக தக்கது.

ஜாம்பாவணோடை,ஜம்பை போன்ற பெயர்கள் வருவதால் ஜாம்பவான் வம்சம் சம்புவறாயர்களாக இருக்கலாம். சம்புவறாயர் ஒய்மான் ந்ல்லிய கோடன் வழி வந்தவர் என சொல்ல படுகின்றது. மாவிலங்கை ஆளும் ஒய்மான நல்ளிய கோடன். சம்புவறாயர் ஒரு குறிப்பு "வீர ராக்கதர்" என உள்ளது. பல்லவ குல சம்புவறாயர் என ஒரு கல்வெட்டு உள்ளத்தால் பல்லாவரோடு பொருத்தி அகலக்கால் வைக்கின்றனர் இதனால் ஆழமான ஆய்வு தெரியாமல் போகின்றது.

வாணர்கள் வந்தவர்கள் வானவராயர்களாகவும் ஜாம்பவான் வழி வந்தவர்கள் சம்புவறாயர்களாக இருக்கலாம்.

chandru said...

I am near to thirukoilur ,my village name thanaganandhal ,in my village near muniyappan kovil there is one kalvettu available till now no one read that kalvettu,I think no one know that kalvettu ,I want know that details any one plz help me

Unknown said...

1பிராம்மா(பிராமனன்) 2 சத்திரியன்
3 வைஸ்னவன் 4 சூத்திரன்..... நல்லாபடி படித்தவர்களிடம் படி

Unknown said...

1பிராம்மா(பிராமனன்) 2 சத்திரியன்
3 வைஸ்னவன் 4 சூத்திரன்..... நல்லாபடி படித்தவர்களிடம் படி

Unknown said...

வன்னியர் மகன்கள் ஒருவரின் பெயர் சம்பு வன்னியர்

VILMEENKODI said...

வில்லவர் பாணர்

நாகர்களுக்கு எதிராக போர்

கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்

இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கர்நாடகாவின் பாணர்களின் பகை

பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

வில்லவர்களின் முடிவு

1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

ஆந்திரபிரதேச பாணர்கள்

ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.

பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

பாண வம்சத்தின் கொடிகள்

முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு

பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு

Post a Comment

Lunax Free Premium Blogger™ template by Introblogger